Friday, March 8, 2013





Our Sweet Memories-வசந்த காலம்-1

வானவில் மனதின்
வசந்த நினைவுகள் …
கால்வாய் நீரில் குளித்த புத்துணர்ச்சி
அரை வாளித் தண்ணீரில் மறைந்து போனது…
[Colorful dreams of mind which are like rainbow
the fresh feel of bathing in canals
Had vanished today with half bucket of corporation water]

வயல்வெளிகளில் சுற்றிதிரிந்த சுகம்
பட்டணத்து பார்க்குகளில் பதுங்கி விட்டன
திருட்டு மாங்காயின் சுவையில்லை
பட்டர் வழியும் பீஸ்ஸாவில் ….
[The joy of adventures in farmland
Today buried in the parks of city
The awesome joy of eating mango
is not replaced by modern pizzas today]

சுகமாகத்தான் இருந்தேன்
தீப்பெட்டி வீட்டிலும்
பட்டணத்து பகட்டுகளில்
கலைந்த வானவில்லாய்
கனவுகள் மட்டும் இலவசமாய்
தேடுகிறேன் ….!
[Even I was in a hut
I was always filled with joy and happiness,
But Now All I am searching my colorful joys
That had been gone in the name of fashion and modernity]

யாரேனும் என் வசந்த காலத்தை
திருப்பி தருவார்களா….!
[Will anyone please give back my spring that
is in the form of my sweet memories]

No comments:

Post a Comment